ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''புகார் கொடுக்க தகுதி வேண்டும்'' - அதிமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த முதல்வர் ஸ்டாலின்!

''புகார் கொடுக்க தகுதி வேண்டும்'' - அதிமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த முதல்வர் ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தமிழ் நாடு அரசு மீது புகார் கொடுக்க தகுதி வேண்டும் என்றும் முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கள் கிழமை காலை திருச்சி சென்றார். இதன் தொடர்ச்சியாக அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் 363 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகள் தொடக்கம், புதிய பணிகளுக்கு அடிக்கல், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க தனி சிமெண்ட்சாலை அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

தமிழ் நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டும் தொழில் திட்டங்களால் இந்திய அளவில் தொழில்துறையில் முதல் மாநிலமாக தமிழ் நாடு திகழ்வதாகவும் தெரிவித்தார்.ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

தமிழ் நாடு அரசு மீது புகார் கொடுக்க தகுதி வேண்டும் என்றும் முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார். தமிழ் நாட்டை மீண்டும் உயர்த்துவதே அரசின் குறிக்கோள் என குறிப்பிட்ட முதலமைச்சர் உழைப்பால் அத்தகைய உயர்வை அடைவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். .விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, சிவங்கர், கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பிக்கள் தொல்.திருமாவளவன், ஆ.ராசா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

First published:

Tags: CM MK Stalin