Home /News /tamil-nadu /

பிரதமர் மோடியுடனான சந்திப்பில் பேசப் போவது என்ன? முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பேட்டி

பிரதமர் மோடியுடனான சந்திப்பில் பேசப் போவது என்ன? முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பேட்டி

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து இருவரும் விசாரித்தனர்- மு.க.ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவித்தார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருநாள் பயணமாக நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதை தொடர்ந்து இன்று காலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ‘குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து இருவரும் விசாரித்தனர்.  குடியரசுத் தலைவர் உடனான சந்திப்பு மன நிறைவை அளித்தது.

    இதை தொடர்ந்து இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளேன். காவிரி விவகாரம், மேகதாது விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இன்றைய சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முறையிட உள்ளேன். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி கூறவுள்ளேன். இன்று இரவே சென்னை திரும்புகிறேன் ‘ என தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    அடுத்த செய்தி