Home /News /tamil-nadu /

எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.. புத்தகம், உபகரணங்களையும் வழங்கினார்

எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.. புத்தகம், உபகரணங்களையும் வழங்கினார்

எண்ணும் எழுத்தும்

எண்ணும் எழுத்தும்

அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடலின் லட்சியம் எனக்கூறிய முதலமைச்சர், தொடக்க கல்வி என்பது வாழ்க்கையின் வழிகாட்டி எனவும், 2025ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெற வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
    தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சா.மு.நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கான பயிற்சி புத்தகத்தையும், கற்றல் உபகரணங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திட்டம் தொடர்பான கைபேசி செயலியையும், பாடலையும் அவர் வெளியிட்டார்.

    இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்வதற்கும், எதிர்காலத்திற்கு ஏற்ற சிந்தனை திறனை கல்வியின் மூலமாக பெறுவதற்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் படிக்க: தமிழகம் முழுவதும் 50 ஐ.ஏ.ஏஸ் அதிகாரிகள் மாற்றம்.. உள்துறை செயலர், மருத்துவத் துறை உட்பட முக்கிய பொறுப்பு வகித்த அதிகாரிகள் இடமாற்றம்

    அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடலின் லட்சியம் எனக்கூறிய முதலமைச்சர், தொடக்க கல்வி என்பது வாழ்க்கையின் வழிகாட்டி எனவும், 2025ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெற வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதென்றும் கூறினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: CM MK Stalin, Department of School Education, Education

    அடுத்த செய்தி