Home /News /tamil-nadu /

ஜிஎஸ்டி முறையால் மாநிலங்களுக்கு நிதிச் சுமை- தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஜிஎஸ்டி முறையால் மாநிலங்களுக்கு நிதிச் சுமை- தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தென் மண்டல கவுன்சில் கூட்டம்

தென் மண்டல கவுன்சில் கூட்டம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வோடு அனைத்து பிரச்னைகளையும் தீர்த்திட வேண்டும் என தென்னிந்திய முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜிஎஸ்டி முறை அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாக தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்து. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்து கொண்டனர். புதுச்சேரி அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். ஆந்திரா, தெலங்கானா அரசுகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், மாநில எல்லை தொடர்பான பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு, சாலை மற்றும் போக்குவரத்து, பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜிஎஸ்டி முறை அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது என குறிப்பிட்டார்.

    மேலும், " நமது மொழிகள் அனைத்தும் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வோடு அனைத்து பிரச்னைகளையும் தீர்த்திட வேண்டும்"என தென்னிந்திய முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தார்.அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

    இதையும் வாசிக்ககல்வி உதவித் தொகை நுழைவுத் தேர்வில் இந்தியை திணிக்க முயற்சி: கனிமொழி குற்றச்சாட்டு

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் கொள்முதல் செய்ய தங்களது அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    இதையும் வாசிக்க: TET Exam : டெட் முதல் தாள் தேர்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

    வெள்ள பாதிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கான நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக விடுக்க வேண்டும் என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    அடுத்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: CM MK Stalin

    அடுத்த செய்தி