முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திடுங்கள்”.. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

“தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திடுங்கள்”.. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

சி.பி ராதாகிருஷ்னனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சி.பி ராதாகிருஷ்னனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை தொகுதி மக்களவை உறுப்பினராகவும் தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இரண்டு முறையும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.  மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சி.பி ராதாகிருஷ்னனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் அவர், “ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.  அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை தொகுதி மக்களவை உறுப்பினராகவும் தமிழ்நாடு பாஜகவின் தலைவராகவும்  பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CM MK Stalin, CP Radhakrishnan, Governor, Jharkhand