Home /News /tamil-nadu /

அரசியலில் முதிர்ந்த அனுபவம்; அரசியல் சட்ட புலமை கொண்டவர் ரோசய்யா : மு.க.ஸ்டாலின் இரங்கல்

அரசியலில் முதிர்ந்த அனுபவம்; அரசியல் சட்ட புலமை கொண்டவர் ரோசய்யா : மு.க.ஸ்டாலின் இரங்கல்

அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்ட ரோசய்யா காங்கிரஸ் இயக்கத்தின் தேசியத் தலைவர்களின் அன்பை பெற்றிருந்தவர். அரசியல் சட்ட மாண்புகள் குறித்து நன்கு அறிந்த அவரது மறைவு பேரிழப்பாகும். : ஸ்டாலின்

    தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.  அவரது மறைவையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  விடுத்திருக்கும் இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது"தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆந்திர முதலமைச்சராக, தமிழ்நாடு மற்றும் கர்நாடக ஆளுநராகப் பணியாற்றிய அவர் - சட்டமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர் மற்றும் மக்களவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர். அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்ட அவர் காங்கிரஸ் இயக்கத்தின் தேசியத் தலைவர்களின் அன்பை பெற்றிருந்தவர். அரசியல் சட்ட மாண்புகள் குறித்து நன்கு அறிந்த அவரது மறைவு பேரிழப்பாகும்.ரோசய்யாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் பதிவில், 'தமிழக முன்னாள் ஆளுனர் ரோசய்யா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். சட்டமன்ற, மேலவை உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என அரசு நிர்வாகத்தில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலும், அனுதாபங்களும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

    Also Read : ஓட்டு போடுங்க..மாநாடு பட டிக்கெட் புடிங்க- இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நூதன முறையில் பேரம்

    ரோசய்யா கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழக கவர்னராக இருந்தார். 1978 முதல் 2009 வரை ஆந்திர மாநில அமைச்சராக பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த ரோசய்யா, 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குப் பெற்ற அவருக்கு 2014-ல் கர்நாடக மாநில கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. தமிழக கவர்னர் பொறுப்பை 2016-ல் நிறைவு செய்ததை தொடர்ந்து அவர், தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுத்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவரது உயிர் இன்று அதிகாலை பிரிந்தது.
    Published by:Musthak
    First published:

    Tags: M.K.Stalin

    அடுத்த செய்தி