Home /News /tamil-nadu /

இனிய நண்பர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இனிய நண்பர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அரசியல் தலைவர்கள் என பல்வேறு பிரபலங்களும் ரஜினிகாந்துக்கு (Rajinikanth) வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்னும் ஹெஷ்டேக்கை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள் வாழ்த்த் தெரிவித்து வருகின்றனர்

    நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்திலும் ரஜினிகாந்துக்கு  வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டு திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு பிரபலங்களும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்னும் ஹெஷ்டேக்கை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள் வாழ்த்த் தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கும்; நல்ல உடல் நலத்துடன் திகழவும் விழைகிறேன்” என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் படிங்க: ரஜினிகாந்த் என்னும் மகா கலைஞன்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி