Home /News /tamil-nadu /

செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற  இந்திய அணிகளுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மாமல்லபுரம் அருகே நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் 'பி' மற்றும் மகளிர் 'ஏ' அணிகள் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளன.

    செஸ்ஒலிம்பியாட்டில் தனி நபர் பிரிவில் சிறந்த வீரர்களுக்கான பிரிவில், இந்தியாவின் சார்பில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நிஹல் சரின் தங்கப் பதக்கம் பெற்றனர். ஆடவர் 'ஏ' அணியில் மூன்றாவது போர்டில் விளையாடிய அர்ஜூன் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். ஆடவர் 'பி' அணியில் மூன்றாவது போர்டில் விளையாடிய பிரக்ஞானந்தாவுக்கு, தனிநபர் பிரிவில் சிறந்த வீரருக்கான வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    இந்திய மகளிர் 'ஏ' பிரிவில் அங்கம் வகித்த தமிழக வீராங்கனை வைஷாலி, 3-வது போர்டின் சிறந்த வீராங்கனைக்கான வெண்கலப் பதக்கத்தையும்,இதே அணியில் ஆடிய தான்யா சச்தேவ், 4-வது போர்டில் வெண்கலப் பதக்கத்தையும் வசப்படுத்தினர். இந்திய மகளிர் 'பி' அணிக்காக ஆடிய திவ்யா தேஷ்முக், 5-வது போர்டின் சிறந்த வீராங்கனைகளுக்கான பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.

    இதையும் படிங்க: செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன்: முதல்வர் ஸ்டாலின்

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற  இந்திய அணிகளுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், செஸ் ஒலிம்பியாடில் பொதுப் பிரிவில் இந்திய பி அணியும் பெண்கள் பிரிவில் இந்திய ஏ அணியும் என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    சதுரங்க போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி அணிக்கும் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஏ அணிக்கும் தலா ரூ. 1 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chess Olympiad 2022, Tamilnadu government

    அடுத்த செய்தி