• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஹெலிகாப்டரில் சென்றது ஏன்? - டெல்லியில் முதல்வர் விளக்கம்

ஹெலிகாப்டரில் சென்றது ஏன்? - டெல்லியில் முதல்வர் விளக்கம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Cyclone Gaja | கஜா புயல் நிவாரணப்பணிகளுக்காக உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக்குழுவை அனுப்ப பிரதமர் ஒத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார்.

கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரிடம் முதல்வர் எடுத்துரைத்தார். புயல் சேதம் தொடர்பான முதற்கட்ட ஆய்வு அறிக்கையையும் முதல்வர் சமர்ப்பித்துள்ளார்.

புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று முதல்வர், பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதற்கட்டமாக ரூ.1500 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரதமருடனான சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் உடனிருந்தனர்.



பிரதமர் உடனான சந்திப்பை நிறைவு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கஜா புயல் சேதங்கள் குறித்த அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளேன். மத்தியக்குழுவை அனுப்பி சேதங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர், விரைவில் மத்தியக்குழுவை அனுப்புவதாக கூறினார். புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.

முதற்கட்டமாக ரூ.1500 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதங்கள் குறைந்துள்ளது. புயல் காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

சாலை மார்க்கமாக சென்றால் முழுவதுமாக பார்க்க முடியாது என்பதால் ஹெலிகாப்டரில் சென்றோம். கடந்த காலங்களில் விட தற்போது சேதம் அதிகமாக இருக்கிறது.” என்று கூறினார்.

புயல் பாதித்த பகுதிகளை பிரதமரோ, மத்திய அமைச்சரோ பார்வையிடவில்லை என்ற கேள்விக்கு, “தமிழக அரசு செய்த பணிகளை நான் கூறுகின்றேன். மத்திய அரசு செய்துள்ளதை அவர்களிடம் கேளுங்கள்” என்று முதல்வர் பதிலளித்தார்.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: