மேகதாது அணை விவகாரம்! மத்திய நீர்வளத்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

கர்நாடக அரசின் மேகதாது திட்ட பரிந்துரைக்கு இந்திய அரசிடம் தமிழக அரசு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடக அரசின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

news18
Updated: July 10, 2019, 3:38 PM IST
மேகதாது அணை விவகாரம்! மத்திய நீர்வளத்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
breaking news
news18
Updated: July 10, 2019, 3:38 PM IST
கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக எல்லையில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கடந்த மாதம் 20-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு விண்ணப்பித்தது.

அதனால் கர்நாடகாவின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் 24-ம் தேதி எழுதியிருந்த கடிதத்தில் பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, கர்நாடக அரசின் விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு வரும் 19-ம் தேதி பரிசீலிக்க உள்ளது.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு, கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக பரிந்துரை செய்வதற்கு ஜூலை மாதம் 19-ம் தேதி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நிபுணர் குழுவின் இந்த நடவடிக்கை, காவேரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது.

கர்நாடக அரசின் மேகதாது திட்ட பரிந்துரைக்கு இந்திய அரசிடம் தமிழக அரசு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடக அரசின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு உள்பட காவேரி ஆறு செல்லும் மாநிலங்களில் கர்நாடகா அரசு உரிய அனுமதியைப் பெறவில்லை.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் நிபுணர் குழு, மேகதாது அணைத் திட்டம் தொடர்பான அனுமதி குறித்து பரிந்துரை செய்ய கர்நாடக அரசுக்கு அழைப்புவிடுத்ததை திரும்பப் பெற வலியுறுத்தவேண்டும். இந்த விவகாரத்தில் உடனடி பதிலை எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...