எடப்பாடி பழனிசாமியின் நேர்மையை உலகமே பாராட்டுகிறது: பொன்னையன் புகழாரம்

பொன்னையன்

  • News18
  • Last Updated :
  • Share this:
‘தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் நேர்மையானவர்’ என்று அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் பொன்னையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக ஆட்சியில் நடைபெறும் ஆன்லைன் டென்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஆர்.டி.ஜி.எஸ்.முறையில் பணம் செலுத்தும் ஆன்லைன் டென்டர் ஒப்பந்த முறையை முதலமைச்சர் அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினார். ஒட்டன்சத்திரம் - அவிநாசி சாலைக்கான டென்டர் முறை ஆன்லைன் வழியாகவே நடைபெற்றதாகவும் பொன்னையன் குறிப்பிட்டார்.

2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ராமலிங்கம் என்பவருக்கு பாக்ஸ் டென்டர் மூலம் ஒரு கிலோ மீட்டருக்கு 33 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் ஆன்லைன் டென்டர் மூலம் வெறும் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியின் நேர்மையை உலகமே பாராட்டுவதாகக் கூறிய அவர், செய்தியாளர்களின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி அங்கிருந்து புறப்பட்டார்.
Published by:DS Gopinath
First published: