• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடியாது - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடியாது - எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கவே 3 எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்க முதலமைச்சர் சதி செய்வதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியபடி தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பரப்புரை

தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று பரப்புரையை தொடங்கியுள்ளனர்.

சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜல்லிபட்டி, செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை, பாப்பம்பட்டி பிரிவு உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் சென்று பரப்புரை மேற்கொண்டார்.

துரைமுருகன், ஸ்டாலினின் கனவு பலிக்காது: முதல்வர் 

அப்போது, பேசிய அவர், வேலூர் தொகுதியில் துரைமுருகனின் மகன் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாலேயே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் துரைமுருகனின் மகனே வெற்றி பெற முடியாது என்ற நிலையில், தமிழகத்தில் திமுக எப்படி ஆட்சிக்கு வர முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பரப்புரை

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவிற்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தாளமுத்துநகர், தருவைகுளம், புதியம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது, மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும் என்றார். அதற்கு பின்னர் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும் என்பதால் அதனை தடுக்கவே 3 எம்.எல்.ஏக்கள் பதவியை பறிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சதி செய்வதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும் - ஸ்டாலின்

முன்னதாக தனது சகோதரி மற்றும் தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியுடன் அத்திமரப்பட்டி, காலங்கரை, பெரியநாயகிபுரம் ஆகிய கிராமங்களில் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பெண்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், வரும் 23-ம் தேதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

ஆட்சியை தக்க வைக்க 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்: தினகரன்

திருப்பரங்குன்றம் தொகுதி அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட தினகரன், இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெற முடியாது என்பதாலேயே 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

திமுக-அதிமுக கூட்டாக செயல்படுகிறது: தினகரன்

முன்னதாக திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், எம்.எல்.ஏ.க்கள் பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி ஆகியோர் மீது சபாநாயகரிடம் அரசு கொறடா புகார் அளித்த விவகாரத்தில் திமுகவுக்கும்-அதிமுகவுக்கும் கூட்டணி இருப்பது தெளிவாகியுள்ளதாகக் குற்றம்சாட்டிருந்தார்.

Also see... உயிர்போகும்போது என் உடலில் அதிமுக கொடியே போர்த்தப்பட வேண்டும்! பன்னீர் செல்வம் உருக்கம்

Also see... தோல்வி பயத்தால் எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்ய அதிமுக முயற்சி: வைகோ


Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: