ஊரடங்கு, மின் கட்டணம், புதிய மாவட்டங்கள்...! பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

பவானிசாகர் அணை கால்வாய்களை புனரமைக்க நீண்ட கால திட்டத்தை வகுக்க அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஊரடங்கு, மின் கட்டணம், புதிய மாவட்டங்கள்...! பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: July 17, 2020, 4:32 PM IST
  • Share this:
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதலமைச்சர், அணைகளை புனரமைக்கவும், சாலை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் 30 விழுக்காடு நிறைவடைந்திருப்பதாகக் கூறிய அவர், அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் இத்திட்டப் பணிகள் முழுவதும் நிறைவடையும் என்றார்.



 

புதிய மாவட்டங்கள் இனி பிரிக்கப்படாது எனவும், தமிழகத்தில் மின் கட்டண நிர்ணயம் சரிதான் என்று நீதிமன்றமே கூறியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading