முதலமைச்சர் எந்தெந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம்?

துபாயில் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றும் முதலமைச்சர் செப்டம்பர் 10-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

முதலமைச்சர் எந்தெந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம்?
தமிழக முதல்வர்
  • News18
  • Last Updated: August 27, 2019, 10:15 AM IST
  • Share this:
இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் 13 நாள் அரசுமுறைப் பயணத்தை நாளை தொடங்க இருக்கிறார்.

முதற்கட்டமாக லண்டனுக்கு செல்லும் முதலமைச்சர் அங்கு, சுகாதாரம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்கிறார்.காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தி குறித்த தொழில்நுட்பங்களை கேட்டறியும் அவர், செப்டம்பர் 2-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் சென்று அமெரிக்க வாழ் தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பினரை சந்தித்துப் பேசுகிறார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படவுள்ள கால்நடைப் பூங்காவிற்கான தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள கலிஃபோர்னியாவில் உள்ள கால்நடைப் பண்ணைகளை அவர் பார்வையிடவுள்ளார். மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்கனவே உள்ள மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்ப்பது தொடர்பான வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ப்ளும் எனர்ஜி நிறுவனத்தையும் முதலமைச்சர் பார்வையிட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


அதைத் தொடர்ந்து துபாயில் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றும் முதலமைச்சர் செப்டம்பர் 10-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

Also see... வேதாரண்யத்தில் திடீரென மோதல் ஏற்பட காரணம் என்ன? 
First published: August 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading