ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் டிரம்ப் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை - முதல்வர்

ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் டிரம்ப் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை - முதல்வர்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கூறியதாவது, “பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சிறப்பான நகரமாக கோவை, சென்னை நகரங்கள் விளங்குகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.  ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

திமுக 10 ஆண்டுகளுக்கு முன் வைத்த அரசு கடனுக்கு தற்போது வரை வட்டி கட்டப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளாக தொடர்ந்து வட்டி கட்டி வருகிறோம்.

ஸ்டாலின் தொடர்ந்து முதலமைச்சர் கனவில்தான் இருக்கிறார். அடுத்த முறையும் அதிமுக தான் ஆட்சிக்கு வரும். நல்ல திட்டங்கள் அமல்படுத்தப்படுவதால் ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

கே. சி. பழனிச்சாமி அதிமுகவில் இல்லை. அவர் பல முறை குற்றங்களுக்கு சிறை சென்றுள்ளார்.

தமிழகத்தில் சிறுபான்மையினர் மக்கள் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லை. திட்டமிட்டு அசியல் லாபத்திற்காக இஸ்லாமிய மக்கள் தூண்டப்பட்ட போராட்டத்தை நடத்த வைக்கிறார்கள். அவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

விவசாயிகளின் நலன் கருதியும், பருவமழையை சேமிக்கவுமே குடிமராத்துப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. மக்களிடையே வெற்றித் திட்டமாக உள்ளது.

7 பேர் விடுதலையில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். 7 பேர் விடுதலை குறித்து திமுக எல்லா இடங்களிலும் பேசுகின்றது. ஆனால், நளினியை மட்டும் விடுதலை செய்தால் போதும் என்று சொன்னது திமுக. 7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு அருகதை இல்லை.

ஊடகங்கள் குறித்து இழிவாக பேசிய திமுக பிரமுகர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஊடகங்கள் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. விவசாயிகளுக்கு ஏற்ற திட்டங்களை கொண்டு வருவதால் டிடிவி தினகரன், முக ஸ்டாலின் ஆகியோரால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

இந்தியாவிலே தமிழகத்தில் தான் எல்லா விதமான போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது” என்று கூறினார்.

First published:

Tags: CM Edappadi Palaniswami, Trump India Visit