திமுகதான் முதுகெலும்பில்லாத கட்சி - முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்

தலைப்பாகை கட்டியபடி மண்வெட்டி பிடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மண்ணை வெட்டி குடிமராமத்து பணியை தொடங்கி வைத்தார்.

Web Desk | news18
Updated: August 8, 2019, 6:13 PM IST
திமுகதான் முதுகெலும்பில்லாத கட்சி - முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Web Desk | news18
Updated: August 8, 2019, 6:13 PM IST
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மக்களுக்கு எதுவும் செய்யாத திமுகதான் முதுகெலும்பில்லாத கட்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பணப்பாக்கம் கிராமத்தில் 204 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் ரூ. 28 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

அப்போது தலைப்பாகை கட்டியபடி மண்வெட்டி பிடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மண்ணை வெட்டி பணியை தொடங்கி வைத்தார்.


விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, குடிநீர் பிரச்சனையை தீர்க்க குடிமராமத்து திட்டம் மிகப்பெரிய திட்டமாக செயல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு வரவேற்பு அளித்த முதலமைச்சர், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு வலியுறுத்தியதற்கு நல்ல பதில் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

முதுகெலும்பில்லாத கட்சி அதிமுக என நாடாளுமன்றத்தில் திமுகவின் டி.ஆர்.பாலு பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மக்களுக்கு எதுவும் செய்யாத திமுகதான் முதுகெலும்பில்லாத கட்சி என பதிலடி கொடுத்தார்.

முதலமைச்சர் தொடங்கி வைத்த குடிமராமத்து திட்டத்தின் மூலம் மழை நீரை சேகரித்தல், நீர் நிலைகளை பாதுகாத்து அதன் கொள்திறனை அதிகரித்தல், நிலத்தடி நீரை செறிவூட்டி குடிநீர் வழங்குதலை நிலைப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Loading...

அடுத்த ஒரு மாதத்திற்கு தமிழகம் முழுவதும் இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தவுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள இந்த மக்கள் இயக்கப் பணிகள் மாவட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள், தனியார் நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்போடு செயல்படுத்தப்படவுள்ளன.

Also watch:  கண்ணைக் கட்டி புத்தகத்தைப் படித்து சாதனை!

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...