• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார் தமிழக முதல்வர்

குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார் தமிழக முதல்வர்

குடும்பத்துடன் முதலமைச்சர் பழனிச்சாமி

குடும்பத்துடன் முதலமைச்சர் பழனிச்சாமி

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசித்தார்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனத்திற்காக நேற்று மாலை ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருந்தார். குடும்ப உறுப்பினர்களுடன் திருப்பதி மலைக்கு சென்றிருந்த அவர் நேற்று இரவு திருப்பதி மலையில் உள்ள வராகசாமி கோவில், ஹயக்ரீவர் கோயில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார்.

    குடும்பத்துடன் முதலமைச்சர் பழனிச்சாமி


    தொடர்ந்து இன்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அஷ்டதள பாதபத்மாரதனை சேவையில் கலந்து கொண்டு குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார். அதன் பின்னர், ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார்.

    தேவஸ்தான அதிகாரிகளுடன் முதல்வர்


    இதனைத்தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பு மரியாதை அளித்து, திருப்பதி ஏழுமலையானின் படத்தை பரிசாக அளித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: