ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முதலமைச்சர் இன்று டெல்லி பயணம்: பிரதமரிடம் 7 பேர் விடுதலை குறித்து பேசுவாரா?

முதலமைச்சர் இன்று டெல்லி பயணம்: பிரதமரிடம் 7 பேர் விடுதலை குறித்து பேசுவாரா?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பரபரப்பான அரசியல் சூழலில், பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதமே அனுமதி கோரி இருந்தார். இந்த நிலையில், நாளை பிரதமரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5 மணிக்கு டெல்லி செல்கிறார் முதல்வர். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகளும் அவருடன் டெல்லி செல்கின்றனர்.

பிரதமர் சென்னை வந்தபோது, அவரை வரவேற்கும் தமிழக முதல்வர் - கோப்புப் படம்

டெல்லி செல்லும் முதல்வர் நாளை காலை பிரதமர் மோடியைச் சந்தித்து பேச உள்ளனர். இந்தச் சந்திப்பின்போது, தற்போதைய தமிழக அரசியல் நிலவரம், வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல், 7 பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பாக மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை விரைவாக வழங்குமாறு கோரிக்கை விடுப்பார் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள்ளார்.

First published:

Tags: CM delhi visit, Cm edappadi palanisamy, PM Narendra Modi