• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கனமழையால் முதல்வரின் நாகை, திருவாரூர் பயணம் ரத்து!

கனமழையால் முதல்வரின் நாகை, திருவாரூர் பயணம் ரத்து!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Cyclone Gaja | புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆய்வு நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

  • Share this:
கஜா புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு வந்த நிலையில், திருவாரூர் மற்றும் நாகையில் கனமழை பெய்து வருவதால், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் பார்வையிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

முதலில் புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்கோவில், மச்சுவாடி பகுதியில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது, புயலால் பலியானவர்கள் குடும்பத்துக்கு அவர் நிவாரணம் வழங்கினார்.

புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு


பின்னர், தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு சென்ற அவர், புயலால் சேதமான தென்னை மரங்களை பார்வையிட்டார். விவசாயிகளுக்கும் அவர் நிவாரணம் வழங்கினார்.

தொடர்ந்து அவர் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லவிருந்த நிலையில், அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஹெலிகாப்டரை இயக்க முடியாத சூழல் இருந்துள்ளது.

இதன் காரணமாக, நாகை மற்றும் திருவாரூர் பயணத்தை ரத்து செய்த முதல்வர் மீண்டும் திருச்சிக்கே திரும்பினார். அங்கிருந்து விமானம் மூலமாக மாலை சென்னை வர உள்ளார்.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: