சீரமைப்பு பணியின் போது உயிரிழந்த 2 மின் ஊழியர்கள் குடும்பத்துக்கு ₹15 லட்சம் நிவாரணம்
சீரமைப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டிருக்கும் 27,941 மின்வாரிய ஊழியர்களின் பணியினை மனதார பாராட்டுகிறேன். அவர்களது பணி மெச்சத்தக்கது என்று முதல்வர் பாராட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
- News18
- Last Updated: November 24, 2018, 2:09 PM IST
கஜா புயல் பாதிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 மின் ஊழியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணமும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கஜா புயலால் கடுமையாக சேதமடைந்த மின் கம்பங்கள், மின் மாற்றிகள் மற்றும் துணை மின்நிலையங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் அயராது ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 16-ம் தேதி நாகையை சேர்ந்த வயர்மேன் சண்முகம் என்பவர் சீரமைப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
20-ம் தேதி புதுக்கோட்டையில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கலைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரை துச்சம் என நினைத்து, சீரமைப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டிருக்கும் 27,941 மின்வாரிய ஊழியர்களின் பணியினை மனதார பாராட்டுகிறேன். அவர்களது பணி மெச்சத்தக்கது.
சீரமைப்பு பணியின் போது உயிரிழந்த சண்முகம், முருகேசன் ஆகியோர் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Also See..
கஜா புயலால் கடுமையாக சேதமடைந்த மின் கம்பங்கள், மின் மாற்றிகள் மற்றும் துணை மின்நிலையங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் அயராது ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 16-ம் தேதி நாகையை சேர்ந்த வயர்மேன் சண்முகம் என்பவர் சீரமைப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சீரமைப்பு பணியின் போது மின் கம்பத்திலேயே உட்கார்ந்து சாப்பிடும் ஊழியர்