நாகரிகத்தோடு நடந்துகொள்ளாவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று கருணாஸின் சர்ச்சைப் பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
இன்று மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஹெச். ராஜா ,கருணாஸ் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன் என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக முதல்வர், சட்டம் தன் கடமையை செய்யும் எதையும் தவறவிடவில்லை எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது காவல்துறை தன் கடமையை நிச்சயம் நிறைவேற்றித் தருவார்கள். தவறுக்கு உண்டான நடவடிக்கையை காவல்துறை நிச்சயம் எடுக்கும். பொதுவாழ்வில் வந்துவிட்டால் அதை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் அந்த நாகரீகம் தெரியாமல் சிலபேர் நடந்து கொள்கிறார்கள் சட்டம் அதற்கு தகுந்த கடமையை செய்யும் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், ”கடம்பூர் ராஜூ மீது சண்முகராஜன் கூறுவது தவறான கருத்து. அதிமுக அரசு சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது. மறைந்த முதல்வ ஜெயலலிதாவின் சாதனைகள் மக்களிடம் சென்றடைந்துள்ளது. இன்னும் புதிய திட்டங்களை நாங்கள் செய்ய இருக்கிறோம். ஆகவே திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரிலும் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும். எய்மஸ் மருத்துவமனை வருவதற்கான அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.
மக்கள் எதிர்க்கட்சியை மறந்து விடுவார்கள். ஊழல் குற்றச்சாட்டே அவர்கள் மீதுதான் உள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு என்றால் அது திமுக தான். அது உலகிற்கே தெரியும். பெட்ரோல் டீசல் என்பது மத்திய அரசின் கீழ் வருகிறது மாநில அரசுக்கு அல்ல மத்திய அரசுதான் அதை குறைக்க வேண்டும். நாங்களும் அதை வலியுறுத்தி வருகிறோம். இதனால் விலைவாசி உயரும் ஆகையால் மத்திய அரசு இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளோம்” இவ்வாறு அவர் பேசினார்.
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.