காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன
மழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் அணைக்கு வரக்கூடிய நீர் வரத்து, முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக திருச்சி, கரூர், சேலம், நாகை, கடலூர் உட்பட 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின், காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், அதற்கான கண்காணிப்பு அலுவலர்கள் உடனடியாக அங்கு செல்ல அறிவுறுத்தினார். அத்துடன், முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் நீர்த்தேக்கங்களில் இருந்து நீர்திறப்பை அதிகரிக்கக் கூடாது. குறிப்பாக இரவு நேரத்தில் வெளியேற்றப்படும் தண்ணீர் அளவை அதிகரிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களிடம் அறிவுறுத்தினார்.
Also Read: கடல் போல் காட்சியளிக்கும் காவிரி.. தண்ணீரில் தத்தளிக்கும் கரையோர கிராமங்கள்.. திருச்சி விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழு
மழை காரணமாக பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்கவும்,தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை அமைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில், சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.