“பேரிடரிலிருந்து அனைவரும் மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும்” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிறுபான்மை சமுதாய மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் 14ம் தேதி ரமலான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார். இறைவனின் திருவசனங்கள் இறங்கிய மாதம் என்பதால் ரமலான் மாதத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 30 நாள் நோன்பு தற்போது முடியும் நிலையில் தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது.

    இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ தியாகமும், ஈகையும் இணைந்த மார்க்க நெறியினைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இனிய ரமலான் நல்வாழ்த்துகள். தமிழக மக்களுக்கே உரிய பெருமைக்குரிய பண்பாடான அனைத்து மத சகோதரத்துவம் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும் வகையில் இந்தப் பெருநாள் அமையட்டும். அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து பெருநாளை கொண்டாட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    சிறுபான்மை சமுதாய மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், நானும் என்றும் இஸ்லாமிய சமுதாய மக்களின் மேல் பேரன்பு கொண்டவர்கள். தி.மு.கழக அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதை இந்த இனிய நன்னாளில் மீண்டும் உறுதிப்படுத்த விழைகிறேன். பேரிடரிலிருந்து அனைவரும் மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    Published by:Ramprasath H
    First published: