முதலமைச்சர் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அரசியல் சூழலில் பரபரப்பாக இருந்தாலும் காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வதை முதலமைச்சர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளர் ஒருவரது வழிகாட்டுதலில் தினந்தோறும் எளிய முறையிலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதற்கான வீடியோ தற்போது வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் உடற்பயிற்சி செய்வதை தனது வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் டிவியில் செய்தி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.