பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் செயல்பாடு உள்ளது: சரத்குமார் பாராட்டு!

முதல்வரை பாராட்டிய சரத்குமார்

நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தேவையான பணிகளை தமிழக முதல்வர் செய்து வருவதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு உள்ளதாக சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, கொரோனா தொற்று அதிகம் பாதிக்கபட்டுள்ள ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வை முடித்து கோவை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

    அங்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர் மு.கஸ்டாலின், ’PPE கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவுகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் ஆய்வு செய்தார். கொரோனா சிகிச்சை பிரிவில் நேரடியாக முதல்வர் சென்று ஆய்வு மேற்கொண்டது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு உள்ளதாக சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சரத்குமார் அவரது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, கொரோனா சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு கவச உடை அணிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆய்வு செய்ததில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பெரும் நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தது மட்டுமன்றி பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டதை வரவேற்கிறேன்.

    கொரோனா பாதிப்பால் பெற்றோரில் ஒருவரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்காக தலா 5 லட்சம் வங்கியில் வைப்புத்தொகை, கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை என நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தேவையான பணிகளை செய்யும் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: