தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது? தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 1,66,408 பேர் விண்ணபித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது? தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்
சத்யபிரதா சாகு
  • News18
  • Last Updated: September 21, 2020, 5:49 PM IST
  • Share this:
கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் செப்டம்பர் 20 ம் தேதி வரை 5,51,408 விண்ணப்பித்துள்ளனர். இதில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பப்படிவம் 6 -யை  1,66,408 பேரும், பெயர் நீக்குவதறகு விண்ணப்பபடிவம் 7 -யை 2,37,248 பேர் விண்ணபித்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் இணையம் மூலமாக சரிபார்த்ததில் தமிழகத்தில் 56,000 இரட்டை பதிவுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இதை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து சரிபார்க்குமாறு தெரிவித்துள்ளது.

Also read... 3 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டிகளில் விஷவாயு தாக்கி 288 பேர் உயிரிழப்பு - மத்திய அரசு தகவல்


மேலும் மாதந்தோறும் இதுபோன்ற தகவல்களை சரிபார்க்க அனுப்பி வருகிறது. இதைத்தொடர்ந்து இரட்டை பதிவுகளை தற்போது கணினி மூலமாகவும் சரிபார்க்கும் பணிகள் மாவட்டவாரியாக நடைபெற்று வருவதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தகவல் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில்  தமிழகத்தில் காலியாக உள்ள குடியாத்தம் மற்றும் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பால் இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதை தள்ளி வைக்கும்படி தமிழக தலைமைச்செயலாளர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading