தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தயார்நிலையில் வாக்கு இயந்திரங்கள்.. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..

இடைத்தேர்தல் நடத்தும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தயார்நிலையில் வாக்கு இயந்திரங்கள்.. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..
சத்யபிரதா சாகு
  • Share this:
இடைத்தேர்தல் நடத்தும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குடியாத்தம் தொகுதி காத்தவராயன், திருவொற்றியூர் தொகுதி கே.பி.பி.சாமி ஆகியோர் உடல்நலக்குறைவின் காரணமாக மரணமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து மார்ச் 1 ம் தேதி இரண்டு தொகுதிகள்  காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம்  அறிவித்தது. கடந்த மாதம் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்தார். இதையடுத்து  அவருடைய  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியும்  காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.


Also read... அரசு 3 மாதங்களாக ஊதியம் தரவில்லை: வாழ்வாதாரத்தை இழந்ததாக கவுரவ விரிவுரையாளர்கள் வேதனை..

எனவே, தமிழகத்தில் 3 தொகுதிகள் காலியாக இருக்கிறது.
இந்த நிலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கபடவில்லை என்றாலும், தேர்தல் நடத்துவதற்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் கட்ட சோதனைகளை முடித்து தயார் நிலையில் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.மேலும் கடந்த வாரம் வாக்கு பதிவு இயந்திரங்களை இடைத்தேர்தலுக்கு தயார் செய்வது தொடர்பாக காணொளிக் காட்சி மூலமாக  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும்  அவர் கூறியுள்ளார்.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading