• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சேலத்தில் அதிக பணம் பறிமுதல் - தேர்தல் அதிகாரி பேட்டி...!

சேலத்தில் அதிக பணம் பறிமுதல் - தேர்தல் அதிகாரி பேட்டி...!

தேர்தல் அதிகாரி பேட்டி

தேர்தல் அதிகாரி பேட்டி

சேலம் மாவட்டத்தில் அதிகமாக 42.47 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 4-ம் தேதி இரவு 7மணி வரை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள கட்டுப்பாடு அறையில் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கப்பட்டு வேட்பாளர்கள்  பெயர்களுடன் தயார் செய்யும் பணிகள் இன்று முழுமையாக நிறைவடையும் என்றார்.

மேலும், திருச்சியில் காவலர்களுக்கு பண விநியோகம் செய்த விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என கூறிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள தரவுகளை வழங்கி உள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தான் எடுக்கும் என்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு கண்காணிப்பு குழுவினரை பணி செய்ய விடாமல் தடுத்த புகாரில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை பெற்று, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளதாக கூறிய அவர், திண்டுக்கல் லியோனி பேசியது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு குறித்து அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்துள்ளது என்றார்.

கொரோனா பாதித்தவர்கள் , கொரோனா பாதித்ததற்கான சான்றிதழோடு வந்து வாக்களிக்கலாம் என்றும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களின் சொந்த வாகனங்களில் பாதுகாப்பாக வந்து வாக்களிக்கலாம் எனவும் சாஹு தெரிவித்தார்.

அதேபோல், ஏப்ரல் 4ம் தேதி இரவு 7மணி வரை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யலாம் என தெரிவித்த அவர், பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், இணையம் மூலமாக பிரச்சாரம் செய்வது தொடர்பாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும், சி.விஜில் செயலியில் அளிக்கும் மக்கள் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

Also read... தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி எப்படி வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்? பா.ஜ.க'விற்கு நீதிமன்றம் கேள்வி!

கடைசி நேர பண பரிமாற்றத்தை கண்காணிக்க கூடுதல் கண்காணிப்பு குழு பணியமர்த்தப்படுவதோடு, மத்திய ராணுவபடையும் களத்தில் இருப்பார்கள் எனவும், 6817 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சாஹூ தெரிவித்தார்.

அதேபோல், வாக்குக்கு பணம் கொடுத்ததாக 133 புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் ஆதாரத்தோடு இருந்த 57 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சேலம் மாவட்டத்தில் அதிகமாக 42.47 கோடியும், சென்னையில் 36.73கோடியும், திருப்பூரில் 14.02 கோடியும், நெல்லையில் 13.39 கோடியும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறை சார்பில் 66 கோடியே 47 லட்சம் ரூபாய் கைபற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த தேர்தலை பொருந்தவரை, பணம், பரிசுபொருட்கள என ஒட்டுமொத்தமாக 2014 ல் 76.89 கோடியும், 2016 ல் 139.40 கோடியும், 2019 ல் 952.01 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளாதாகவும் சாஹூ தெரிவித்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: