• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CAA & NRC-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி தமிழகமெங்கும் தொடரும் போராட்டம்!

CAA & NRC-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி தமிழகமெங்கும் தொடரும் போராட்டம்!

  • Share this:
    குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை வண்ணாரப்பேட்டையில் 17வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நேற்று மாலை முதல் பல்லாவரம் மசூதி அருகே பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி அங்கு போராட்டம் நடத்தப்படுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நாகை மாவட்டம் நாகூரில் இரண்டாவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வரும் இஸ்லாமியர்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 இடங்களில் இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரமங்கலம், அறந்தாங்கி, அன்னவாசல் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்ற நிலையில், காசி புதுப்பேட்டைப் பகுதியில் பெண்கள், முள்வேலிக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    நெல்லையில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ உள்ளிட்ட 3 சட்டங்களும், இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரானது என முழக்கமிட்டனர்.

    கோவை கொடிசியா மைதானத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது.

    வாழ்வுரிமை மாநாடு


    இதில், மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, டெல்லியில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் அதிகாரியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் போலீசாருடையது எனக் கூறினார்.

    இதேபோல், விழுப்புரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Also see:


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: