முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Bus Strike: தொடரும் ஸ்டிரைக்... திருச்சியில் கிராமப்புற மாணவர்கள், பொதுமக்கள் அவதி

Bus Strike: தொடரும் ஸ்டிரைக்... திருச்சியில் கிராமப்புற மாணவர்கள், பொதுமக்கள் அவதி

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கடந்த 25ம் தேதி முதல் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் திருச்சியிலும்  தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கத்தை விட குறைந்த எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்சி  கண்டோன்மென்ட், தீரன்நகர், துவாக்குடி, மணப்பாறை, துறையூர் உட்பட திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் மொத்தம்  போக்குவரத்து பணிமனைகள் 16 இருக்கின்றன. இதில் திருச்சி மாநகரில் 440, புறநகரில், 496 பேருந்துகள் என மொத்தம், 936 அரசுப் பேருந்துகள் உள்ளன. இந்நிலையில் குறைந்த எண்ணிக்கையிலேயே தொழிலாளர்கள் பணிக்கு வருகை தந்ததால், வழக்கத்தை விட குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சுமார்  20 % சதவீத அரசுப் பேருந்துகளே இயக்கப்படுவதால்,  தனியார் பேருந்துகளை நம்பியே பொதுமக்கள் பயணிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக மாநகருக்குள் பயணிக்க தனியார் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதால், பாதிப்பு இல்லை. சில தனியார் பேருந்துகள் காலியாக செல்கின்றன.

அதே நேரத்தில், திருச்சி மாநகரை சுற்றியுள்ள பகுதிகள், துறையூர், உப்பிலியபுரம்,  மணப்பாறை, மருங்காபுரி, முசிறி, மண்ணச்சநல்லூர், மணிகண்டம் உள்ளிட்ட புறநகப் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அரசுப் பேருந்து சேவைகளே அதிகம் உள்ளன. இப்பகுதிகளுக்கு தற்போது பெரும்பான்மையான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பேருந்து கிடைக்காததால் பொதுமக்கள் காத்திருந்தனர். மேலும், அரசுப் பேருந்துகளில் இலவசமாக மற்றும் சலுகை கட்டணத்தில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தனியார் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனார்.

குறிப்பாக, கிராமப் பகுதியில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால் மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே அரசு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காண வேண்டும் என்று, மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க... இரவோடு இரவாக ஜெயலலிதா பேனரை அகற்றிய அதிமுகவினர்: முன்னுதாரணம் என பொதுமக்கள் பாராட்டு

அதே நேரத்தில் இதுகுறித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் கேட்டதற்கு, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு காரணமும் அரசுதான். அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. எங்களது கோரிக்கைகளை பல முறை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். வேலை நிறுத்தம் குறித்து முன் கூட்டியே அறிவித்து, தொடர்கிறோம் என்கின்றனர்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Bus, Strike, Transport workers, Trichy