தமிழக பட்ஜெட் தொடர்பாக அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், ‘இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் கடந்த 2-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்தத் தொடரில் காலை 11 மணிக்கு, அடுத்த நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்துக்கு 2 லட்ச ரூபாய், விபத்து மரணத்துக்கு 4 லட்ச ரூபாய், நிரந்தர இயலாமைக்கு 2 லட்ச ரூபாய் காப்பீடு தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
6-ம் வகுப்பு முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு கணினிஅறிவியல் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். பட்ஜெட் தொடர்பாக அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழக அரசின் கடன்தொகை ஒரே ஆண்டில் 4 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 5.70 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது.
சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கொரோனா பேரிடர் காலத்தில் எதிர்பார்த்ததைவிட வரி வருவாய் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுவிட்டு, இன்னொரு பக்கம் அரசின் கடன் தொகையும் அதிகரித்திருப்பதாக கூறியிருப்பது நகை முரணாக உள்ளது.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாடே செயல்படாமலிருந்தநிலையில் வளர்ச்சிப் பணிகள், வழக்கமான திட்டங்கள் பெருமளவில் அமல்படுத்தப்படாத நிலையில் தமிழக அரசு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடம் வாங்கியுள்ளது அரசின் செலவீனங்கள் வெளிப்படைத்தன்மையோடு இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி அளவிற்கு அதிகமாக கடன் வாங்கியுள்ள நிலையிலும் நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை 84 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்ற அறிவிப்பு அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படையாக காட்டுகிறது. பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை மேற்குவங்கம், ராஜஸ்தான், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட குறைத்ததைப் போல தமிழகத்தில் குறைத்து அறிவிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், செஸ் வரியை மட்டும் குறைக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்து செய்யப்போவதாக அறிவித்தது ஏமாற்றம் தருகிறது. மொத்தத்தில் மக்களின் எதிர்பார்க்குகளுக்கு எந்த அறிவிப்புகளும் இல்லாமல் பெயரளவிலான அறிக்கையாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TN Budget 2021, TTV Dhinakaran