• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘டிமிக்கி கொடுக்கிற பட்ஜெட்’: ஜெயக்குமார் விமர்சனம்

‘டிமிக்கி கொடுக்கிற பட்ஜெட்’: ஜெயக்குமார் விமர்சனம்

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

பெட்ரோல் விலையை மட்டும் குறைத்துவிட்டு டீசல் விலையை குறைக்காமல் ஏமாற்றிவிட்டனர் என திமுக அரசை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

  • Share this:
    தமிழக அரசின் பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற பட்ஜெட்டாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

    சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது யானை பசிக்கு சோளப்பொறி போன்றது. பெட்ரோல் விலையை 5 ரூபாய் வரையும் டீசல் விலையை4 ரூபாய் வரையும் குறைத்து இருக்க வேண்டும். பெட்ரோல் விலையை மட்டும் குறைத்துவிட்டு டீசல் விலையை குறைக்காமல் ஏமாற்றிவிட்டனர்’ என்று குற்றம் சாட்டினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக கூறிய நிலையில், அது தொடர்பாக இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என இல்லத்தரசிகள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

    மேலும் படிக்க: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000: ரேஷன் அட்டையில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை - நிதியமைச்சர்


    ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு வராது என திமுக கூறியது. தற்போது என்ன ஆனது என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார்,  நீட்  தேர்வு விவகாரத்தில் திமுக மாணவர்களை குழப்பிவிட்டது. திமுக ஆட்சியில்  நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் இந்த எண்ணிக்கை  அதிகமாக இருந்ததாக தெரிவித்தார்.

    அதிமுக ஆட்சியில் சொல்லாததையும் செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், கொரோனா நிதியாக 4 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கின்றனர். அதிமுக ஆட்சியில் ரேசன் கார்டு மூலம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை பெற்றவர்களின் விவரங்கள் சேகரிப்பு!


    வெறும் டிஜிட்டல் டிமிக்கியாக பட்ஜெட் உள்ளது. மொத்தத்தில் தமிழக மக்களுக்கு டிமிக்கி கொடுக்கும் பட்ஜெட்டாக தமிழக அரசின் பட்ஜெட் அமைத்துள்ளது என விமர்சித்தார். மின் கட்டணம்,பேருந்து கட்டணம் போன்றவை எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: