மக்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 2021 - 2022ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். சுமார் 3 மணிநேரம் பட்ஜெட் உரையை அவர் வாசித்தார். பெட்ரோல் மீதான வரி குறைப்பு உட்பட பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில்,தமிழக அரசின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக சட்டமன்றகுழு தலைவர், ஜி.கே.மணி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, காவிரி கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசை வலியுறுத்தல்,தர்மபுரி, விழுப்புரம் போன்ற பல மாவட்டங்களில் சிப்காட் விரைந்து துவக்கப்படும் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்
கல்விக் கடன் தள்ளுபடி, விவசாய கடன்களில் மேலும் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைவு போன்றவற்றை மக்கள் பெரிதும் எதிர்பார்த்ததாகவும் ஆனால் பட்ஜெட்டில் பெட்ரோல் வரி குறைப்பு குறித்த அறிவிப்பு மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
நல்ல அம்சங்களை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை வரவேற்கக்கூடியதாக இருந்தாலும் மக்கள் எதிர்பார்த்தவை இல்லை என்றும் ஜி.கே.மணி கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.