கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடியும், மசூதி, தேவாலயங்களை புனரமைக்க ரூ. 12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டை (Tamil Nadu Budget 2022) தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பு- தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கட்டடக்கலை ஆகியவற்றின் விழுமியங்கிளன் சான்றாக, தொன்மையான திருக்கோயில்கள் தமிழகமெங்கும் விரவியுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்து, புனரமைத்து பார் போற்றும் வண்ணம் பணிகளை மேற்கொள்ள இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இப்பணிகள் ரூ. 100 கோடி செலவில் மேற்படும்.
இதையும் படிங்க - “ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்” விளையாட்டு துறைக்கு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
இந்த மதிப்பீடுகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ. 340.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களைப் பழுதுபார்ப்பதற்காகவும், புனரமைப்பதற்காகவும் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு சென்னையில் உள்ள வெஸ்லி தேவாலயம், புனித தோமையர் மலை தேவாலயம்,திருநெல்வேலியில் உள்ளகால்டுவெல் தேவாலயம், நாகர்கோவிலில் உள்ள தூய சேவியர் தேவாலயம், சென்னையில் உள்ள நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஏர்வாடி தர்கா, நாகூர் தர்கா ஆகிய தொன்மையான வழிபாட்டுத் தலங்கள் புனரமைக்கப்படும்.
இப்பணிகளுக்கு, வரும் நிதியாண்டில் 12 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு,மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.
இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்றுமேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை,மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம். இவ்வாறு நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TN Budget 2022