• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகம் மின்மிகை மாநிலம் கிடையாது - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

தமிழகம் மின்மிகை மாநிலம் கிடையாது - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர்

நிதியமைச்சர்

ஏறத்தாழ 2500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளிலிருந்தே தமிழ்நாடு அரசு வாங்கி சமாளிக்கிறது.

  • Share this:
    தமிழகத்தை மின்மிகை மாநிலம் என கூறுவது தவறானது என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

    தமிழக பட்ஜெட் தாக்கல் கலைவாணர் அரங்கத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    திமுக அரசின் முதல் பட்ஜெட்டை, காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பல்வேறு துறைகள் மீதான அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். அதன்படி மின்சாரத்துறை குறித்து அவர் பேசுகையில் தமிழகத்தை மின்மிகை மாநிலம் என்று கூறுவது தவறு என பேசினார்.

    Also Read: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு!

    மின்துறை குறித்த நிதியமைச்சரின் அறிவிப்புகள்:

    தமிழகத்தின் நிறுவப்பட்டுள்ள மொத்த மின் உற்பத்தி திறன் 32646 மெகா வாட், இருப்பினும் அதிகபட்ச மின் தேவை ஏற்படும் போது 14,351 மெகா வார் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. ஏறத்தாழ 2500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளிலிருந்தே தமிழ்நாடு அரசு வாங்கி சமாளிக்கிறது. எனவே சில ஆண்டுகளில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது.

    தமிழக மின் உற்பத்தி கழகம் சந்திக்கும் பெரும் நிதி இழப்புகள் முற்றிலும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன.

    Also Read: பட்ஜெட்டில் தனியார் பள்ளிகள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு என்ன?

    ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை குறைக்கும் வகையில் விநியோக அமைப்பு பலப்படுத்தப்படும்.

    மொத்த அனல் மின் நிலைய உற்பத்தி நிறுவுதிறன் 4320 மெகாவாட் மட்டுமே

    அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 17980 மெகாவாட் மினுற்பத்தி செய்யப்படும்

    மின்வாரிய நிறுவனங்களை சரிவில் இருந்து மீட்க தேவையாக நடவடிக்கை எடுக்கப்படும்

    முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்க சபாநாயகர் அறிவுறுத்திய நிலையில் தன் கையில் வைத்திருந்த குறிப்பை தொடர்ந்து வாசித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளி நடப்பு செய்வதாக அறிவித்து அதிமுகவினர் அனைவரும் வெளியேறினர்..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: