• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • TN Budget 2021 : சிங்காரச் சென்னை 2.0 தொடங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்

TN Budget 2021 : சிங்காரச் சென்னை 2.0 தொடங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்

சிங்கார சென்னை 2.0

சிங்கார சென்னை 2.0

சென்னையில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு அழிக்கப்படும்.

  • Share this:
    nசென்னையில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு அழிக்கப்பட்டு சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கும் முக்கியத்துவம் அளித்து சிங்காரச் சென்னை 2.0 தொடங்கப்படும் என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    மேலும், சென்னை நகரில் மூன்று இடங்களில் அதாவது கணேஷாபுரம் சுரங்கப் பாதையின் மேல், கொன்னூர் நெடுஞ்சாலை-ஸ்ட்ராண்ச் சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலையில் 135 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் இதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

    சென்னையில் உள்ள நீர் வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டம் 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் செலவில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

    சென்னை நகர கூட்டாண்மை திட்டம் விரைவில் உலக வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் தொடங்கப்படும்.

    நகர்ப்புறங்களில் ஊதிய உத்தரவாதம் மற்றும் சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என ரங்கராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது.

    புதிய பெருநகர வளர்ச்சி குழுமங்கள்- மதுரை கோவை திருப்பூர் பகுதி வேகமாக வளர்ந்து வரும் ஒசூர் பகுதிக்கு ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு 3954.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

    புதிய குடிசை மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வு கொள்கை வகுக்கப்படும். புறவழிச் சாலைகள் இல்லாத ஐம்பத்தி ஒன்பது நகராட்சிகளுக்கு புறவழிச் சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

    தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டம் 663 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

    Must Read : பட்ஜெட் குறித்த உடனுக்குடன் அப்டேட்டுக்கு இங்கே கிளிக் செய்க

    சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது” என்பன போன்ற பல்வேறு தகவல்களை நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: