TN Budget 2021 : பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.1,582 கோடி நிதி குறைப்பு

பள்ளிக் கல்வி

பள்ளிக்கல்வித் துறைக்கு இந்த ஆண்டு 32ஆயிரத்து 599 கோடி ரூபாய் நிதி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    பள்ளிக்கல்வித் துறைக்கு கடந்த ஆண்டு 34 ஆயிரத்து 181 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 32ஆயிரத்து 599 கோடி ரூபாய் நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூ. 1,582 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு இலவச பள்ளி சீருடைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் இதற்கு 409 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

    இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைகழக்கத்துடன் இணைந்து ‘ஆளில்லா விமானக்கழகம்’ அமைக்கப்படும்.

    உயர் கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு. ரூ. 10 கோடி செலவில் 25 கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.

    413 ஒன்றியங்களுக்கு தலா 40 டேப்லெட்கள் வழங்க ரூ.13.22 கோடி நிதி ஒதுக்கீடு. 865 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.20 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.

    நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கணினித்திறனை மேம்படுத்த ரூ.114.18 கோடி செலவில் கணினி வகுப்பறைகள் அமைக்கப்படும்.

    Must Read : பட்ஜெட் குறித்த உடனுக்குடன் அப்டேட்டுக்கு இங்கே கிளிக் செய்க

    பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. மனப்பாடம் செய்வதில் இருந்து, மாணவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published: