அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக உயர்வு- நிதியமைச்சர் அறிவிப்பு

மாதிரிப்படம்

மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு

 • Share this:
  தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 2021 - 2022ஆம் ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் முதல் பட்ஜெட் இதுவாகும். தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

  அவரது உரையில், “இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை, 1.7.2021 முதல் செயல்படுத்தப்படும் என்று இந்த அவையின் உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

   
  Published by:Ramprasath H
  First published: