தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் உரையில் அரசு ஊழியர்கள் நலன் குறித்த அறிவிப்பில் நிதியமைச்சர் கூறியதாவது, “இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை, 1.7.2021 முதல் செயல்படுத்தப்படும்.
பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். அதற்கிணங்க, குடும்ப ப் பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கட்டணம் மாதம் ஒன்றிற்கு 110 ரூபாய் என உயர்த்தப்படும். குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்களுக்கும் இது பயனளிக்கும்.
Also read: TN Budget 2021 | தமிழக பட்ஜெட்டில் 10 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல், கோவிட் பெருந்தொற்று காலத்தில், தமிழ்நாட்டின் அரசு அலுவலர்களுக்கு தாமதமின்றி முழுமையாக சம்பளம் வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளில், அரசு அலுவலர்கள் தன்னலம் கருதாமல், அவர்களின் உயிரை பணயம் வைத்து சேவை ஆற்றினார்கள். இத்தருணத்தில், அகவிலைப்படியை உயர்த்துவதில் அரசு எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை அரசு ஊழியர்கள் நன்கு அறிவார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எனவே, அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1.4.2022 முதல் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.