• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • TN Budget 2021 | கோவை, மதுரையில் மெட்ரோ.. திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் - நிதியமைச்சர் அறிவிப்பு

TN Budget 2021 | கோவை, மதுரையில் மெட்ரோ.. திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் - நிதியமைச்சர் அறிவிப்பு

தமிழக பட்ஜெட் அறிவிப்பு

தமிழக பட்ஜெட் அறிவிப்பு

திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் TUFIDCO நிதியுடன் ஏற்படுத்தப்படும்.

  • Share this:
    கோயம்புத்தூரில் மெட்ரோ இரயில் திட்டத்தை அமைப்பது குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கபடும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

    தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.  நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் வரியற்ற பிற வருவாய் அதிகரிக்க தற்போது இருக்கும் வருவாய் ஈட்டும் சொத்துக்களின் மதிப்பை கூட்டுவதன் மூலமும்  புதிய வருவாய் ஈட்டும் சொத்துக்களான நவீன பேருந்துநிலையங்கள், வணிக  வளாகங்கள், சமுதாயக் கூடங்களை உருவாக்குவதன் மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இந்த அரசு தற்போதைய பேருந்து நிலையங்களை நவீன ஒருங்கிணைந்த  பேருந்து நிலையங்களாக தரம் உயர்த்தும், திருச்சிராப்பள்ளியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் TUFIDCO நிதியுடன் ஏற்படுத்தப்படும் என்றார் .

    கோயம்புத்தூரில் மெட்ரோ இரயில் திட்டத்தை அமைப்பது குறித்து மத்திய அரசுடன்  கலந்தாலோசித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரையில் மெட்ரோ இரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும்” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: