கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி உள்ளிட்ட பழைய வரிகளில் நிலுவையில் உள்ள 28 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்க எளிமையாக அரசிற்கு பயனளிக்கக்கூடிய விதமாக சமாதான் திட்டம் அறிவிக்கப்படுகிறது.
பயிர்க் கடன் வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. விவசாய நகை கடன் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரம் மற்றும் தூய்மை சரியாக கணக்கிடப்படவில்லை, இந்த முறைகேடுகளை தீர ஆராய்ந்து இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.
அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதிதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும்.
விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்குகள் நிறுவப்படும்.
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்தி, அச்சமூகத்திற்கு சொந்தமான வக்பு சொத்துக்களை அரசு பாதுகாக்க முடியும்.
மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் புதுப்பிப்பதற்காக தலா 6 கோடி ரூபாய் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டுமொத்த 4142.33 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
Must Read : பட்ஜெட் குறித்த உடனுக்குடன் அப்டேட்டுக்கு இங்கே கிளிக் செய்க
பழங்குடியினர் துணை திட்டத்திற்கு 1306.02 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பன போன்ற பல்வேறு அறிவிப்புகளுடன் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.