• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அனைத்து கிராமங்களிலும் 1 ஜிபிபிஎஸ் வேக இணைய வசதி - பட்ஜெட்டில் அறிவிப்பு

அனைத்து கிராமங்களிலும் 1 ஜிபிபிஎஸ் வேக இணைய வசதி - பட்ஜெட்டில் அறிவிப்பு

பட்ஜெட் உரை

பட்ஜெட் உரை

மகளிர் கல்வி, முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ. 762.23 கோடி நிதி ஒதுக்கீடு.

  • Share this:
    தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் 1 ஜிபிபிஎஸ் வேக திறன்கொண்ட இணைய வசதி ஏற்படுத்தப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

    புதிய பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள் மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் ஓசூர் பகுதிகளில் ஏற்படுத்தப்படும்.

    ‘நமக்கு நாமே’ திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு. இந்தத் திட்டத்துக்கு கணிசமாக பங்காற்றுபவர்களுக்கு முதலமைச்சர் சிறப்பு விருதுகள் வழங்கப்படும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்துக்கு ரூ.257.16 கோடியும், மருத்துவக் கருவிகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.741.91 கோடி நிதியும், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்திற்கு ரூ.116.46 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.490.27 கோடி நிதி ஒதுக்கீடு.

    100 நாள்களுக்குள், ரூ.626 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் திமுக அரசால் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

    மகப்பேறு விடுமுறை நாட்கள் 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும். வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு.

    100 கோயில்களில் ரூ.100 கோடி செலவில் குளம் மற்றும் தேர் சீரமைக்கப்படும். 12,955 கோயில்களில் ஒருகால பூஜை திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு. பழனி தண்டாயுதபானி கோயில் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, சித்த மருத்துவ முறை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    Must Read : பட்ஜெட் குறித்த உடனுக்குடன் அப்டேட்டுக்கு இங்கே கிளிக் செய்க

    மகளிர் கல்வி, முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ. 762.23 கோடி நிதி ஒதுக்கீடு. மூன்றாம் பாலினத்தவர்களின் ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பன போன்ற பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் வெளியிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: