ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தொடர்ச்சியாக செல்போனில் பப்ஜி விளையாடிய 16 வயது மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

தொடர்ச்சியாக செல்போனில் பப்ஜி விளையாடிய 16 வயது மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

தொடர்ச்சியாக செல்போனில் பப்ஜி விளையாடிய 16 வயது மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

சதீஷ்குமாரின் கேம் உலகத்தில் பகல், இரவு இல்லை. சாப்பிடும்போது கூட கேமில்தான் மூழ்கியிருப்பார் என்கிறார்கள் குடும்பத்தினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஈரோட்டில் செல்போனில் பப்ஜி விளையாடிய 16 வயது மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

  ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த குமார் என்பவரின் 16 வயது மகன் சதீஷ்குமார். குமார பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் டெக்ஸ்டைல் டிசைனிங் முதலாமாண்டு படித்து வந்தார்.

  ஊரடங்கு காரணமாக, வீட்டில் தாய் மீனாவின் செல்போனில் தூங்கும் நேரம் தவிர எல்லா நேரமும் கேம் விளையாடி வந்துள்ளார். அதிக நேரம் கேம் விளையாடிதால், செல்போன் பழுதடைந்துள்ளது. அதனால், கோபித்துக் கொண்ட மகனை சமாதானம் செய்ய தந்தை செல்போனை பழுது பார்த்து கொடுத்துள்ளார்.

  சதீஷ்குமாரின் கேம் உலகத்தில் பகல், இரவு இல்லை. சாப்பிடும்போது கூட கேமில்தான் மூழ்கியிருப்பார் என்கிறார்கள் குடும்பத்தினர். திங்கள் மாலை வீட்டிற்கு அருகில் பழைய மாட்டுச்சந்தை திடலில் அமர்ந்து சதீஷ்குமார் செல்போனில் கேம் விளையாடியுள்ளார்.

  மற்ற நண்பர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென, வாயில் நுரை தள்ளி சதீஷ்குமார் மயக்கமடைந்துள்ளார் உடனே, அருகில் இருந்த நண்பர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர் அவர் உயிரிழந்ததாக அறிவித்தனர்

  இந்த செய்தியை கேள்விப்பட்ட சதீஷ்குமாரின் கும்பத்தினரும், நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர். பிரேத பரிசோதனை முடித்த பிறகு உயிரிழந்த சதீஷ்குமாரின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சதீஷ்குமாரின் மரணம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Death, PUBG, Pubg game, Video Games