Home /News /tamil-nadu /

இந்து அறநிலையத்துறை கோவில் பணியாளர்களுக்கு போனஸ் தொகை அதிகரிப்பு: தமிழக அரசு

இந்து அறநிலையத்துறை கோவில் பணியாளர்களுக்கு போனஸ் தொகை அதிகரிப்பு: தமிழக அரசு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் வரப்பெறும் கோவில்களில் பணிபுரிந்துவரும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 14 விழுக்காடு உயர்வு செய்து,31 விழுக்காடாக நிர்ணயம் செய்து வழங்க உத்தரவிடப்படுகிறது. 

மேலும் படிக்கவும் ...
    இந்து அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்றும் பொங்கல் கருணைக் கொடை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருக்கோவில் வளர்ச்சிக்கும்  கோவில் சொத்துக்களை பாதுகாக்கவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் திருக்கோவில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை  அரசு செயல்பட்டு வருகிறது.

    அந்த வகையில்,மாத ஊதியம் பெறாத கோவில் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு கொரோனா காலத்தில் ரூ.4,000 மற்றும் 15 மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டன. ஓய்வுப் பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசை கலைஞர்கள் முதலானவர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.1000ஐ ரூ.3000 மாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டது.

    கிராமக் கோவில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.3000ல் இருந்து ரூ.4,000 ஆக உயர்த்தப்பட்டது. கோவில்களில் மொட்டை போடுவதற்கு கட்டணம் விலக்களித்து, அப்பணியை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கோவில் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு செட் புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: குட் நியூஸ்! போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு


    அந்தவகையில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் வரப்பெறும் கோவில்களில் பணிபுரிந்துவரும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 14 விழுக்காடு உயர்வு செய்து,31 விழுக்காடாக நிர்ணயம் செய்து வழங்க உத்தரவிடப்படுகிறது.

    இதன்படி, அர்ச்சகர்கள் மற்றும் சீட்டு விற்பனையாளர்களுக்கு ரூ.2500, காவல் பணியாளர்களுக்கு ரூ.2200, துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.1400 மாதச் சம்பளம் உயரும். இதேபோல், , இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.1000 ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடைஇவ்வாண்டில் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: பொங்கல் பரிசுக்கு ரேஷனில் பயோமெட்ரிக் ...கொரோனா பரவும் என பொதுமக்கள் அச்சம்

    Published by:Murugesh M
    First published:

    அடுத்த செய்தி