ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘திமுகவின் இந்தி எதிர்ப்பு பிரச்சாரத்தை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்’ - அண்ணாமலை அறிவிப்பு

‘திமுகவின் இந்தி எதிர்ப்பு பிரச்சாரத்தை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்’ - அண்ணாமலை அறிவிப்பு

அண்ணாமலை

அண்ணாமலை

ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து மக்களிடம் அவப்பெயரை திமுக சம்பாதித்துள்ளது. மக்கள் திமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திமுகவின் இந்தி எதிர்ப்பு பிரச்சாரத்தை கண்டித்து, பாஜக சார்பாக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, அரசியல் காரணமாக திமுக இந்தி எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. திமுகவின் கபட நாடகம்தான் இந்த இந்தி எதிர்ப்பு. பாஜகவில் இருக்கும் எல்லோருக்கும் இந்தி முழுமையாக தெரியாது.

அதாவது இந்தியை யாரும் திணிக்கவில்லை. ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து மக்களிடம் அவப்பெயரை திமுக சம்பாதித்துள்ளது. மக்கள் திமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதை திசை திருப்பும் முயற்சியாக இந்தி எதிர்ப்பு பிரச்சாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்தி என்பது முக்கிய பிரச்சனையா? இது சம்பந்தமாக முதல்வர் எதுவும் தெரிவிக்கவில்லை. முதல்வர் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் தற்காலிக வாபஸ்… போராட்ட குழுவினர் அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சி இந்தி திணிப்பை மேற்கொண்டது. மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரசுடன் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, இந்தி திணிக்கப்பட்டது குறித்து திமுக பேசவேண்டும்.

ரயிலில் தள்ளி கல்லூரி மாணவி கொல்லப்பட்டதை அறிந்து நொறுங்கிப்போனேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை

எனவே இந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது திமுகவின் கபட நாடகம் மட்டும்தான். இது மக்களுக்கு நன்றாகவே தெரியும். திமுகவின் இந்த கபட நாடகத்தை, இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்தை கண்டித்து மாவட்ட அளவில் விரைவில் பாஜக ஆர்ப்பாட்டத்தை நடத்தும்” என தெரிவித்தார்.

First published:

Tags: Annamalai, BJP, DMK