காவிரி விவகாரத்தில் கர்நாடக பக்கம் நிற்கிறோமா? கே.எஸ். அழகிரிக்கு பாஜக பதில்!

கே.எஸ். அழகிரிக்கு கண்டனம்

தமிழகத்திற்கு விரோதமாகச் செயல்படுகிற கர்நாடக அரசுக்குஆதரவாக தமிழக பா.ஜ.க. தலைவர் குரல் கொடுப்பது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கு என கே.எஸ். அழகிரி விமர்சித்திருந்தார்.

  • Share this:
    காவிரி விவகாரத்தில் தமிழக பாஜக மற்றும் அதன் தலைவர் எல். முருகன் குறித்து கே.எஸ். அழகிரி வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கர்நாடகம் வழங்குகிற காவிரி நீர் தமிழகத்தில் வினாடிக்கப்படுவதாக பாஜக தலைவர் முருகன் டெல்லியில் கருத்து தெரிவித்து இருந்தார்.  இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,  காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்ற இறுதித் திப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த விதமான கட்டுமானப் பணிகளையும் எந்த மாநில அரசும் மேற்கொள்ள உரிமை இல்லை என்றும்  மேகதாதுவில் அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு சமர்ப்பித்த உடனே அதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்திருக்க வோண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும்,  தமிழகத்திற்கு விரோதமாகச் செயல்படுகிற கர்நாடக அரசுக்குஆதரவாக தமிழக பா.ஜ.க. தலைவர் குரல் கொடுப்பது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கு என்றும்,  காவேரி தண்ணீரை வீணடித்துவிட்டோம் என்ற சொல் அ.தி.மு.கவின் 10 ஆண்டு ஆட்சிக்குபொருந்துமே தவிர, அறுபது நாள் கூட நிறைவு பெறாத தி.மு.க. ஆட்சிக்கு பொருந்தாது என்றும் தெரிவித்த கே.எஸ். அழகிரி, இத்தகைய குற்றச்சாட்டை தமிழக பா.ஜ.க. தலைவர் கூறுவது  மிகவும் விந்தையாகவும், வியப்பாகவும் இருப்பதாகவும் இதைவிட பச்சை துரோகத்தை தமிழகத்திற்கு பா.ஜ.க. செய்துவிட முடியாது என்றும் விமர்சித்திருந்தார் இந்த விமர்சனத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

    மேலும் படிக்க: மு.க.ஸ்டாலினை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம்..


    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி, கர்நாடக அரசுக்கு ஆதரவாக எல் முருகன் குரல் கொடுத்திருப்பதாக  கே.எஸ். அழகிரி தெரிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும்,
    எல்.முருகன் பற்றி கே.எஸ் அழகிரி கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சித்துள்ளார். இது ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.  விவசாயிகள் பற்றிய பேச்சை திரித்து பரப்புகிறார்கள் என்று தெரிவித்த அவர், கர்நாடக அரசு காவிரிவின் குறுக்கே அணை கட்டி வரும் விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழக பாஜக துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தமிழகத்தை கேட்காமல் அணைக்கு அனுமதி கிடையாது..


    கே.எஸ்.அழகிரி சொன்ன வார்த்தைகளை திரும்ப பெறவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் வி.பி.துரைசாமி எச்சரிக்கை விடுத்தார்.
    Published by:Murugesh M
    First published: