ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டிடிவி தினகரனுடன் கூட்டணியா? பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன ஒரு வரி பதில்!

டிடிவி தினகரனுடன் கூட்டணியா? பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன ஒரு வரி பதில்!

அண்ணாமலை

அண்ணாமலை

வரும் 15ம் தேதி 1500 இடங்களில் பால் விலையை உயர்வு, சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இன்று உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சரித்திர தீர்ப்பு எனவும் அதை தமிழ்நாடு பாஜக மனதார வரவேற்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

  பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கு வழங்கிய 10% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதனை முழுமையாக வரவேற்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

  மேலும் இந்த பொருளாதார இடஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் இதில் திமுக, விஷமதனமான கருத்தை பரப்பி வருகிறது எனவும் தெரிவித்தார். இதில் 10% என்பது குறைவு என்றாலும் அதன் மூலம் பலன் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், “வரும் 15ம் தேதி 1500 இடங்களில் பால் விலையை உயர்வு, சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.” என அறிவித்தார்.

  இதையும் வாசிக்க: "சமத்துவத்தின் ஆணி வேரை அசைத்து பார்த்துள்ளது''.. 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிபதி ரவீந்திர பட் சொன்னது என்ன? (news18.com)

  மேலும், அதிமுக தான் பெரிய கட்சி, அவர்கள் தலைமையில் தான் கூட்டணி என கூறிய அவர், டிடிவி தினகரன் கூட்டணி அழைப்பு குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

  ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என திமுக எம்.பிக்கள் கடிதம் எழுதியது கீழ்த்தரமான செயல் என குற்றம்சாட்டினார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Annamalai, BJP