Home /News /tamil-nadu /

விசிகவினர் பாஜக அலுவலகத்திற்கு வந்து புத்தகங்களை கொடுக்கலாம் – அண்ணாமலை அழைப்பு

விசிகவினர் பாஜக அலுவலகத்திற்கு வந்து புத்தகங்களை கொடுக்கலாம் – அண்ணாமலை அழைப்பு

அண்ணாமலை

அண்ணாமலை

மோடியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி குறித்து தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    விசிகவினர் பாஜக அலுவலகத்திற்கு வந்து புத்தகங்களை கொடுக்கலாம் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்து மதத்தின் புதிர்கள் நூலை படித்துக்காட்ட நேரம் கொடுக்க முடியுமா என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு கோரிக்கை விடுத்த நிலையில் இதற்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

    மோடியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி குறித்து தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் மோடியும் அம்பேத்கரும் ஒரே பாதையில் பயணிக்கிறார்கள் என்ற வகையில் இளையராஜா கூறினார். இதையடுத்து, அம்பேத்கர் மோடியை சரிக்கு சரியாக பேசியது, அம்பேத்கர் ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக இளையராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினரும், ஆதரவு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து சமூகவலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.

    இதையும் படிங்க - ராஜ்பவன் கணக்குப்பிள்ளையாக பாஜக தலைவர் அண்ணாமலை எப்போது மாறினார்? - கி.வீரமணி

    இதனிடையே, பாஜக தலைவர் அண்ணாமலை, அம்பேத்கர் செய்ததையும் பிரதமர் மோடி செய்ததையும் ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்து விவாதிக்க நான் தயார் என அண்ணன் திருமாவளவனை அழைக்கிறேன். அவர் சொல்லும் இடத்தில் அவர் சொல்லும் நேரத்தில் விவாதிக்கலாம் என்று கூறினார்.

    அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய திருமாவளவன், அம்பேத்கர் பற்றி பேச மோடியே தகுதியற்றவர் என்பதே எங்கள் குற்றச்சாட்டு. அம்பேத்கர் எழுதிய சாதியை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற புத்தகத்தை மோடி, அமித் ஷா படித்திருப்பார்களா? வாதம் செய்ய வேண்டுமானால், மோடிக்கும் திருமாவளவனுக்கும் இடையே வாதம் நடக்கட்டும் என்று கூறியிருந்தார்.

    இதையும் படிங்க - ‘’இந்தியா - இலங்கை கடல்வழி மின்பாதை திட்டத்தை கைவிட வேண்டும்’’ – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

    இதன்பின்னர் செய்தியாளர்க சந்தித்த அண்ணாமலை, விவாதிப்பது குறித்து திருமாவளவனிடம் இருந்து பதில் வரவில்லை என்று விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்த விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு,  #இந்துமதத்தின்புதிர்கள் (Riddles in Hinduism) நூலை தங்களிடம் கொடுத்து அதில் 10 பக்கம் மட்டும் படித்து காட்ட விரும்புகிறோம்.

    நாளை கமலாலயத்தில் இருந்தால் நேரம் கொடுக்க இயலுமா? என பாஜக தலைவர் அண்ணாமலையை டேக் செய்து ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.



    இந்நிலையில் வன்னி அரசுவின் கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடைய இடதுகை வலதுகை அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை 26ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம். நம் அலுவலகத்தில் தயாராக இருக்கக்கூடிய புத்தகங்களையும் வாங்கி செல்லலாம்.

    அதன் பின்பு அண்ணன் தொல்.திருமாவளவனிடம் நேரத்தையும், தேதியும் அவர்கள் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும், தயாராக சொல்லும் இடத்திற்கு வருகின்றேன். அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சகோதர சகோதரிகளை நமது கமலாலயத்திற்கு 26 ஆம் தேதி வரவேற்கின்றேன், உங்களிடம் புத்தகம் இருந்தால் கொடுப்பதற்கு!

    தலைப்பு: அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்!’ என்று பதில் அளித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Annamalai, BJP, VCK

    அடுத்த செய்தி