முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாஜக ஆதரவு யாருக்கு? எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை!

பாஜக ஆதரவு யாருக்கு? எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை!

எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அண்ணாமலை

யாருக்கு ஆதரவளிப்பது என்ற சூழலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்று வந்த பின்னர் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக இதுவரை அதன் நிலைபாட்டை தெரிவிக்காத நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானதையடுத்து அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் அனைவரும் அவர்களின் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் பாஜக மட்டும் அதன் நிலைபாட்டை இன்னுமும் தெரிவிக்காமலேயே இருக்கிறது.

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ. பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியே பாஜகவிடம் ஆதரவை கோரியிருந்தனர். அதனையடுத்து எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வமும் செந்தில் முருகன் போட்டியிடுவார் எனவும், பாஜக போட்டியிட்டால் தங்களின் வேட்பாளர் திரும்ப பெறுவார் எனவும் அறிவித்தார்.

யாருக்கு ஆதரவளிப்பது என்ற சூழலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லி பயணத்திற்கு பிறகு இன்று எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார் அண்ணாமலை.

அவருடன் கரு.நாகராஜன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி ரவி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது அரசியல் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

First published:

Tags: ADMK, Annamalai, Edappadi Palaniswami, Erode Bypoll, Erode East Constituency