பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று சந்திக்கும் எல்.முருகன் - முதல்வர் வேட்பாளரை ஏற்பது பற்றி ஆலோசனை எனத் தகவல்

எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று சந்திக்கும் எல்.முருகன், முதல்வர் வேட்பாளரை ஏற்பது பற்றி ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  முதல்வர் வேட்பாளர், கூட்டணி குறித்து பாஜக - அதிமுக 2ம் கட்ட தலைவர்கள் இடையே வார்த்தைப் போர் நடந்துவரும் சூழலில், பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று சந்திக்க உள்ளார்.

  அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வதில் சிக்கல் உள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதேபோன்று கூட்டணி குறித்து வானதியும் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறினார்.

  Also read: உ.பி காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் முழக்கமிட்ட பெண் உறுப்பினர் மீது தாக்குதல்  இதற்கு அ.தி.மு.க தலைவர்கள் காட்டமாக பதில் தந்து வந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடந்த வெள்ளிக்கிழமை எல்.முருகன் சந்தித்தார். அதன்பின்னர் டெல்லி சென்றுள்ள முருகன், இன்று பாஜக தேசியத் தலைவர் நட்டாவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பிற்குப் பிறகு, கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்பதாக பாஜக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
  Published by:Rizwan
  First published: